திருமண வரன்கள் பரிமாற்றத்துக்காக மத்யமர் Matrimony என்று ஒரு இணை குழுவை உருவாக்கியுள்ளனர் மத்யமர் குழுவினர். மத்யமர் மணமாலை என்று அழகான தமிழ் பெயர் வைத்திருக்கலாம்.

எதற்கும் இருக்கட்டும் என்று நானும் சேர்ந்து கொண்டேன். பிள்ளை பெண் தேடுவோருக்கு ஒரு சர்வீஸ் போல ஓரளவுக்கு மேட்ச் ஆகும் வரன்களை அவரவருக்கு வாட்ஸப்பில் அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறேன்.

நேற்று ஒரு வரன் கண்ணில் பட பஞ்சவர்ணத்துக்கு அனுப்பி வைத்தேன். ராதாமாமியின் தம்பிக்கு…ஏறக்குறைய என் வயது.. வரன் தேடுவதாக எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்ததால் அனுப்பியது..

என்ன சொல்லியிருக்க வேண்டும்…அனுப்பறேன்/அனுப்பலை.. இரண்டே ஆப்ஷன் தானே? ஆனால் நடந்தது வேறு..

வேற வேலை இல்லையா?

இருக்கு..மேட்ச்மேக்கர் வேலையும் அதோட புதுசா..

வெட்டியா இருந்தா இப்படி தான்..(ஒரு ஐடி ஊழியரை பார்த்து…)

இதுவும் ஒரு சமூக சேவை தானே?அப்படியா..10th Std பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி ப்ராபளம் ஏழெட்டு அனுப்பறேன்..படிச்சு பொண்ணுக்கு பாடம் சொல்லி தாங்க.

===

இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு.. இவ்ளோ பெரிய தண்டனை..?