“ரொம்ப நாளா கேக்கணும்னு நினைச்சேன்..எதுக்காக பாஜக வந்துடும்னு இத்தனை பதட்டப்படறீங்க? எதிர்க்கறீங்க..?”

“என்ன தோழர்..இப்படி கேக்கறீங்க..அவங்க வந்தாங்கன்னா சனாதனம் சேர்ந்து வந்துடும்ல..அதை எதிர்க்கிறது தானே திராவிட கோட்பாடு..?”

“அதென்ன..சனாதனம்னா அத்தனை பயங்கர விஷயமா?..ஏதானும் ஒண்ணு ரெண்டு சொல்லேன்..”

“சொல்றேன்..இப்போ சனாதனத்தோட ஆகப்பெரிய சதி திட்டம் என்னென்னா குலத்தொழில்..அதாவது கோவில்லே மணியாட்டறவன் பிள்ளை கோவில்லே மணியாட்டணும்..வண்ணான் பிள்ளை வண்ணானாவே துணி வெளுக்கணும்..விவசாயி பிள்ளை விவாசாயியாவே இருக்கணும்ங்கிறது தான் அவங்க எண்ணம்..இதை இங்கே புகுத்த விடலாமா..? அதான் எதிர்க்கிறோம்..”

“இதை ஏன் எதிர்க்கணும்..?”

“என்ன தோழர் இப்படி கேட்டுட்டீங்க..சமூக நீதி வேண்டாமா?..அதென்ன ஒரு குலத்துக்கு மட்டும் வசதியான உசத்தியான தொழில்..மத்தவங்களுக்கு மட்டும் மட்டமான வேலையா? ..தலைமுறை தலைமுறையா அவங்களே அனுபவிக்கணுமா? நமக்கெல்லாம் வேண்டாமா?”

“அப்படீன்னா ஒரே குலமோ குடும்பமோ தலைமுறை தலைமுறையா அதிகாரத்தை அனுபவிச்சா அது சனாதன கொடுமைனு சொல்றே..அதான் எதிர்க்கறே இல்லையா..?”

“ஆமா தோழர்..சனாதனம் எந்த விதத்துலேயும் வந்துடக்கூடாதுங்கிறது தான் பெரியார் சொல்லி தந்த பாடம்..”

“சரி..உங்க தலைவர் கலைஞர் இருந்தார்..திமுகவுக்கும் அவர் தான் தலைவர்..அவர் தான் முதல்வர்..அவரு போனதும் இப்போ அவர் பிள்ளை ஸ்டாலின் தலைவரா வந்துட்டாரு..அவர் தான் முதல்வர் வேட்பாளர்…என்ன சரியா?”

“ஆ..ஆமா..(சுரம் குறைகிறது..)”

“அடுத்ததா அவர் பிள்ளை உதயநிதி ஸ்டாலினை கொண்டு வந்துட்டாரு..இவருக்கு அப்புறம் அவர்..திமுகல என்ன தான் நொட்டினாலும் இவங்க தான் தலைமை ..இவங்களுக்கு தான் அதிகாரம்..என்ன சரிதானே..?”

“அது வந்து…நீ சங்கீ..அப்படி தான் பேசுவே…”

“அடி செருப்பால..கலைஞர் குடும்பத்துக்கு கொத்தடிமைன்னு சாசனம் எழுதி கொடுத்துட்டு..சனாதனத்தை எதிர்க்கறோம்ன்னு எதுக்குடா பிலிம் காட்டறீங்க? ..

இன்னொண்ணு சொல்றேன் கேட்டுக்கோ..இப்போ தமிழக பாஜக தலைவர் ஒரு தலித்..ஆனா தலித்துங்கிறதுக்காக அவரை கொண்டு வந்து வெக்கலை..திறமைசாலிக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்க..”

“எல்லாம் எங்களுக்கு தெரியும்..பான்பராக் வாயனுங்க கட்சி..எல்லா போஸ்ட்டும் வடநாட்டானுக்கு தான்..தமிழ்நாட்டுக்காரனுக்கெல்லாம் தேசிய பதவி கொடுக்கமாட்டாங்க..”

“ஓ..நீ அப்படி வர்றியா..இதையும் தெரிஞ்சுக்கோ..இதுவரைக்கும் பாஜகவுக்கு வாஜ்பாய் அத்வானிலே ஆரம்பிச்சு 11 தலைவர்கள் வந்தாச்சு..அதுலே மூணு பேர் தெற்கத்தி ஆளுங்க…அதுலே ஒருத்தர் தமிழர்.. ஜனா கிருஷ்ணமூர்த்தி ….உங்க கட்சியிலே முடியுமாடா?..”

போன் அடிக்கிறது..உ.பி எடுத்து பேசிவிட்டு..

“எதிர்கால முதல்வருக்கு ஏதோ பிரச்சனையாம்..தீர்த்துட்டு வந்து பதில் சொல்றேன்..”

“என்னாச்சு..ஸ்டாலின் தொகுதியிலே பிரச்சனையா..நீ போய் தீர்த்துவெக்க போறியா?”

“இல்லை தோழர்..இன்பநிதி அடிச்ச கிரிக்கெட் பந்து..சாக்கடைல விழுந்துடுச்சாம்…நான் தான் போய் எடுத்து தரணும்..”

“அதுக்கு ஏண்டா உன்னை கூப்பிடணும்..அங்கே வேற யாருமே இல்லையா..?”

“அதெப்படி..ஸ்டாலின் விளையாண்ட போதும் உதயண்ணா விளையாண்ட போதும் எங்கப்பாரு தானே பந்து பொறுக்கி போட்டாரு..இப்போ நான் பண்றேன் ..எங்க குடும்ப உரிமையை விட்டு கொடுப்போமா?”

“சரி போ..அப்படியே போற வழியிலே நல்ல மம்பட்டியா தேடி எடுத்துக்கிட்டு போய் சனாதனத்தை வேரறுத்துடு..”