பத்திரிகை நிருபர்களுக்கு தேர்தல் கமிஷன் அதிகாரி விளக்கம் அளிக்கிறார்.. பக்கத்தில் உ.பி களும் ஆஜர்.

தே. அ : டிஷ் ஆன்டெனாவை கழட்டிட்டோம் ..தேங்காய் நார் கண்டெனரை பிரிச்சு பார்த்துட்டோம்..இன்னும் இவங்களுக்கு சந்தேகம் தீரலைன்னு தான் இந்த ஏற்பாடு..

ப.நி : என்னங்க இது மாட்டு வண்டி ..?

தே. அ : ஆமாங்க..இங்கே இருக்கிற அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் சாப்பாடு கொண்டு வர இனிமே மாட்டு வண்டி தான்..ஜீப்ல வேன்ல சாப்பாடு கொண்டு வந்தா கூட சந்தேகப்பட்டு கலாட்டா பண்றாங்க..

ப.நி (உ.பி. சிடம்)..என்னங்க..இப்போ உங்களுக்கெல்லாம் திருப்தியா?

உ.பி: அதெப்படி..இது மாட்டு வண்டியா ஓட்டு வண்டியான்னு எங்களுக்கு சந்தேகமா இருக்கு..

ப.நி: இதுல என்னங்க சந்தேகம்..?

உ.பி: சொல்றேன்..முதல்ல வண்டியில இருக்கிறது காளை மாடு..பசுவதை கூடாதுனு போராடுறது சங்கிங்க கட்சி.. பசுமாட்டுக்கும் காளை மாட்டுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா?…இப்போ பகுத்தறிவோட யோசிச்சு பாருங்க.. நாங்க சந்தேப்படறதுக்கு காரணம் இருக்குனு உங்களுக்கே புரியும்…

ப.நி: இதுலேயும் சந்தேகமா..அவங்க இன்னும் என்ன தான் பண்ணனும்னு எதிர்பார்க்கறீங்க..?

உ.பி: ம்ம்..அந்த ரெண்டு ஆன்டெனா இருக்கில்ல.. அதை கழட்டிட்டு உள்ளே அனுப்புங்க..

தே. அ : யோவ்…அது கொம்புய்யா…

உ.பி: அதெல்லாம் எங்களுக்கு தெரியாது…கழட்டுன்னா கழட்டுங்க..