ஒரு அவசிய காரியமாக வெளியே சென்று வர நேர்ந்தது. MRT ரயிலில் வீடு திரும்பும் போது பக்கத்து சீட்டில் ஒரு நம்மூர் ஆசாமி. காதில் இயர் போனை மாட்டிக்கொண்டு ஓயாத பேச்சு. அம்பானி அதானி என காதில் விழ கவனிக்க ஆரம்பித்தேன்.

ஊரில் லாக் டவுன் கட்டுப்பாடுகளை பற்றி கோவிட் பரவலை பற்றிய பேச்சு என புரிந்தது. அம்பானி அதானிக்காக மருந்து விலைகளை கண்டபடி ஏற்றி மக்களை கொல்லும் மனசாட்சி இல்லாத மனிதர் என்று மோடிக்கு சஹஸ்ர நாம அர்ச்சனை.

வெளிநாடு வந்த உ.பி என புரிந்தது. ஆசாமிக்கு ”ரயில் பயணங்களில் பக்கத்தில் இருபவருடனோ போனிலோ பேசாமல் இருக்கவும்” என்று கொட்டை எழுத்துகளில் எழுதி ஒட்டியிருந்த அறிவிப்பை சுட்டி காட்டினேன்.

நாம் வாழுகின்ற தேசம் வகுத்த விதிகளின் படி தான் வாழ வேண்டும். இங்கேயே மீறும் கூட்டம் இந்தியாவில் மட்டும் கடைபிடிக்குமா? விவேக் வசனம் தான் ஞாபகம் வந்தது.. அஞ்சு ரூபா பிரியாணி துன்னா காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும்..

உபியாச்சே..அத்தனை சீக்கிரம் புரிந்துவிடுமா?..பேசுவதை நிறுத்தவில்லை..