ரஜினிக்கு பிறகு திரைக்கு வெளியேவும் ரசிக்க வைத்த இன்னொரு நடிகர்..தல அஜித்..

சினிமாவில் கிடைக்கும் பெயர் புகழை பயன்படுத்தி முதல்வர் கனவில் வலம் வரும்.. தொட்டதற்கெல்லாம் மூக்கை நுழைத்து அறிவாளியாக காட்டிக்கொள்ளும் நடிகர்கள் மத்தியில் என் தொழில் நடிப்பு மட்டுமே என்று அடக்கமாக இருக்கும் அஜித் இன்று அரை நூற்றாண்டை எட்டுகிறார்..

நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க என வாழ்த்துவோம்..💐💐!!

பைக்ரேஸ் பிரியரான அஜித்தை ஒரு முறை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது..அதிலும் பைக்கில் அமர்ந்த வாக்கிலேயே பார்த்தது கூடுதல் சுவாரசியம். அது 96-97 என்று நினைவு. 31ம் நம்பர் பஸ்ஸில் சிம்சன் வேலைக்கு போகும் காலை நேரம், 07:15. பீச் ரோடு காந்தி சிலை அருகே ஏதோ ஷூட்டிங். உல்லாசம் என்று பிறகு தெரிந்தது..

ரேஸ் பிரியர் ரோஸ் கலர் பவுடர் முகத்தில் லேசாக ஒற்றியவராக பைக்கில் நான்கைந்து நபர் சூழ அமர்ந்திருக்கும் காட்சி..காதல் கோட்டை சூப்பர் ஹிட் கொடுத்த பிறகு நடித்த படம்..உல்லாசம் படம் சுமார் தான் என்றாலும் அஜித் சூப்பராக இருந்தார்..

தல வாலிப வயதில் கொஞ்சம் ரவுடியாக இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது..அவர் நடித்த வரலாறு அல்ல உண்மை வரலாறு..மந்தைவெளி நார்ட்டன் தெருப்பக்கம் குட்டி சுவரில் அமர்ந்து விசிலடித்த பெண்களில் ஒன்று என் அய்த்தை மகள்..மன்னிப்போம் மறப்போம்..

வாசு என்று ஒரு டிரைவர். சென்னை வரும்போது ஆக்டிங் டிரைவராக அழைப்பேன். பாடி பில்டர் வேறு (ஒரு பாதுகாப்புக்கு தான்! ). சினிமாவிலும் ஆக்டிங் கொடுத்தவராம். தலயுடன் ரெட் படத்தில் நடித்திருப்பதாக சொல்வார். இன்னா மனிசன் சார்..ஜென்டில்மேன்னா பக்கா ஜென்டில்மேன் தல மட்டும் தான் என்பார்..

உடன் நடிப்பவர்களிடம் நடித்து பெயரை வாங்கவில்லை..பிடித்து பெயர் வாங்கியிருக்கிறார்..

அஜித்தை ஹீரோவாக நினைத்து நான் எழுதிய இந்த ஓப்பனிங் சாங்..அவர் பிறந்த நாளில் மீண்டும் நினைவூட்டி வாழ்த்துகிறேன்..நீங்களே மனதிலே பாடிக்கொள்ளலாம்..

(தனன்ன தனன்ன தனநன்னன்ன -தன
தனன்ன தனன்ன தானநன்னன்ன)

புலியா தலையா புலிதலையா -இவன்
தனியாய் நடக்கும் தலைமுறையா

அலையா கடலா அலைகடலா -இவன்
புயலாய் கடக்கும் பெருமழையா

இடியா நடையா இடிநடையா -இவன்
ரெடியாய் வெடிக்கும் புதுவெடியா

மலையா சிலையா மலைசிலையா- இவன்
இலையாய் இருக்கும் எரிமலையா

(புலியா தலையா புலிதலையா)

பகையா உறவா பகைஉறவா -இவன்
புகையாய் மறையும் மழைமுகிலா

பகலா இரவா பகலிரவா -இவன்
கலராய் ஜொலிக்கும் முழுநிலவா

மலரா மணமா மலர்மணமா- இவன்
பலரும் புரட்டும் புதுப்பணமா

கனியா மொழியா கனிமொழியா -இவன்
தனியாய் சுவைக்கும் தமிழ்மொழியா

(புலியா தலையா புலிதலையா)

நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர்.. அதனாலேயே அவரை இன்னும் பிடிக்கிறது..

Happy Birthday Ajith…