தெலுங்கு படம்..வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஸ்டைலில் அக்கட தேசத்து அதிரி புதிரி சிரிப்பு படம்..

ஜோகிபேட் என்னும் உள்ளடங்கிய கிராமத்தில் பெண்களுக்கான அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் ஹீரோ ஊரெல்லாம் தன்னை கேலி செய்வது கண்டு பொறுக்காமல் இரண்டு மாதத்தில் ஹைதராபாத் சென்று பெரியாளாக காட்டுகிறேன் என்று அப்பாவிடம் சவால் விட்டு கிளம்புகிறான்..

உருப்படாத இரண்டு நண்பர்களும் உடன் சேர்ந்துகொள்ள மூவராக போய் சேர்கின்றனர்..ஊர்க்காரன் ஒருவனை பிளாக்மெயில் செய்து ஒரு பணக்கார பிளாட்டில் தங்குகின்றனர்..அடுத்த வீட்டு அழகி மேல் ஹீரோவுக்கு காதல் பிறக்கிறது..

இன்னொரு பக்கம் புதிதாக பதவியேற்ற ஒரு ஊழல் அமைச்சர் 500 கோடி ரூபாய் அடிக்கும் திட்டத்தில் ஒரு செல்போன் வீடியோ மூலம் மாட்டிக்கொள்கிறார். அவரை ஒரு பார்ட்டியில் யாரோ சுட்டுவிட மூவர் அணியினர் வீட்டில் வந்து சுருண்டு விழுகிறார்..

அமைச்சர் பிழைத்தாரா?…அவர்கள் தப்பித்தனரா?..அந்த போனில் இருந்த ரகசியம் என்ன..? எல்லாவற்றையும் சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கின்றனர்..அதிலும் கோர்ட் சீனில் ஹீரோயின் வாதாடுவது டாப்போ டாப்..

படத்தில் காமடி பண்ணாத கேரக்டரை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்..அந்த மஞ்சள் மாருதி கார் கூட சிரிக்க வைக்கிறது.. அக்கட தேசத்திலிருக்கும் அத்தனை காமெடியன்களும் படத்தில் ஆஜர்..

குட்டியான ரோலில் நம் கீர்த்தி சுரேஷ்…அவரை விட கொஞ்சூண்டு ரோலில் விஜய் தேவரகொண்டா..கெஸ்ட் ரோல்தான்..அவர்களுக்கும் காமெடி ரோல்தான்..

கண்ணுக்கழகான ஹீரோயின்..ஹீரோவை விடவே ஒரு இன்ச் உயரம்..(அனுஷ்க்கா 2 ?)..இருந்தும் ஆபாசமோ விரசமோ துளியும் இல்லாமல் பார்க்க அத்தனை அழகாக இருக்கிறது..

நேற்று படம் பார்த்து முடித்தும் சிரித்துக்கொண்டே இருந்தேன்..மொக்கை கிக்கை என விமர்சனங்களை தூக்கி எறிந்து தாராளமாக பார்க்கலாம்..

அமேசான் ப்ரைம்ல் உள்ளது..